ஜப்பானில் 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு இணையதளம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் தான் விண்வெளியில் வேலை செய்வதாகவும், ஒரு விண்கலத்தில் இருப்பதாகவும் கூறி அடிக்கடி பேசி வந்தார். மூதாட்டியும் அவரை நம்பி நட்பாக பழகினார். ஆனால், அந்த நபர் உண்மையில் ஒரு மோசடி செய்பவர் என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.
ஒரு நாள், அந்த ஆன்லைன் நண்பர் மூதாட்டியிடம் தான் ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். விண்கலத்தில் தன்னை யாரோ தாக்குவதாகவும், தப்பிக்க ஆக்சிஜன் வாங்க பணம் தேவைப்படுவதாகவும் கேட்டார். இதைக் கேட்டு பதறிய மூதாட்டி, அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பினார். ஆனால், அதன் பிறகு அந்த நபர் தொடர்பு கொள்ளவில்லை. அப்போது தான் மூதாட்டி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதை அறிந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இந்த மோசடி குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஜப்பானில் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக வயதானவர்கள் இதில் சிக்குகிறாரார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. எனவே, அனைவரும் இணையதளத்தில்அறிமுகமில்லாதவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
