
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் மற்றும் லோகேஷ் கணக்கராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் முதல் பாடல் நான் ரெடி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலுக்கு பல பிரபலங்களும் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு நடனமாடி வெளியீட்டுள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க