சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருவதோடு மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார். என்னை அவர் ரவுடி என்று கூறியுள்ளார். என்னை ரவுடி என்று கூறியதை அவரால் நிருபிக்க முடியுமா.? எனக்கு அண்ணாமலை ஐபிஎஸ் படித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

உண்மைக்கு புறம்பாக பேசினால் வழக்கு வரும் என்பது அவருக்கு தெரியாதா.? சட்டப் பாதுகாப்பு பற்றி தெரியாமல் தலித் மீது அவதூறு கருத்து பேசினால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியுமா.? எங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என்னை ரவுடி என்று கூறியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது வழக்கு தொடரப்படும். மேலும் நாங்கள் மண்டியிட்டதோ மன்னிப்பு கேட்டதோ கிடையாது. இதுதான் எங்கள் பரம்பரை. இதுதான் காங்கிரஸ் வரலாறு என்று கூறினார்.