நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு அதிரடி மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தான் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்பதால் தனக்கென இங்கே தனியாக வீடு இல்லை என்றும், அதனால் தனது கணவர் விஜய்யின் வீட்டிலேயே தங்கி வாழ்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தான் விஜய்யால் தேவையற்ற முறையில் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அவரிடமிருந்து விவாகரத்து கோருவதாகவும் அந்த மனுவில் பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையாகத் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது ஒரு பொது விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வர் பதவியை நோக்கி அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள ஒரு நபர், இனி வெறும் தனிநபர் மட்டுமல்ல என்பதால், அவரது குடும்பச் சிக்கல்கள் மற்றும் சட்டப்பூர்வ மனைவியின் உரிமைப் போராட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. அடிப்படை உரிமைக்காக நீதிமன்றம் ஏறியுள்ள சங்கீதாவின் இந்த மனு, விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
