இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘லெட்ஸ் ஜெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிக் ஆஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். மேலும் இதில் யுவனா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில்  இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸில் கலந்துகொள்ள தோனி மற்றும் அவருடைய மனைவி ஷாக்சி சென்னை வந்துள்ளார்கள்.

இந்நிலையில், நேற்று தோனியிடம் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ”எனது கேப்டன் மற்றும் என்னுடையே ரோல் மாடல், நான் நேசிக்கும் ஒரு மனிதன் தோனி” என்று தெரிவித்துள்ளார்.