இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி பட்டத்தை வென்றவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஐஸ்வர்யா ராய் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் உடல் எடை அதிகரிப்பால் உருவ கேலிக்கு ஆளாகியுள்ளார். இது பற்றி தற்போது ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து பேசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, ஆராத்யா பிறந்த பிறகு என்னுடைய உடல் எடை கூடியதால் பல சந்தர்ப்பத்தில் அதனை வைத்து என்னை கேலி செய்கின்றனர்.

ஆனால் என் உடல் எடை அதிகரித்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை?. என் மகள் பிறந்ததால் உடல் எடை அதிகரித்தது..  அதனால்  உங்களுக்கு என்ன. நீங்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்.? இந்த பிரச்சினைகளைப் பற்றி நான் பார்த்துக் கொள்வேன்.

நான் நினைத்தால் இரவோடு இரவாக உடல் எடையை குறைக்க முடியும். ஆனால் தற்போதைக்கு எனக்கு உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் என்ன பேசினாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்த திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.