
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 28 வயது பெண்ணுக்கும் 30 வயது வாலிபருக்கும் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மாப்பிள்ளை பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர். இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் திடீரென மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.
அவர்தான் பட்டப்படிப்பு முடித்துள்ளதால் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த இந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். அந்த மணப்பெண்ணிடம் பல மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திருமணம் நின்றது. மேலும் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டதால் வரதட்சணை மற்றும் பணம் போன்றவைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.