டெல்லியை சேர்ந்த நூர் சபா என்ற பெண், ஒரு நர்சிங் ஹோமில் தனக்குச் செய்யப்பட்ட பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் முகமது நதீம் என்பவர் தவறுதலாகத் தவறான நரம்பை வெட்டிவிட்டதாக மருத்துவ அலட்சியம் குறித்து அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நூர் சபா, மற்றொரு மருத்துவமனையில் பரிசோதித்த போது தான் தனது நரம்பு துண்டிக்கப்பட்ட விவரம் தெரியவந்து, பின்னர் வேறொரு ஆபரேஷன் மூலம் உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து நியாயம் கேட்க நூர் சபா நர்சிங் ஹோமிற்குச் சென்றபோது, மருத்துவர் நதீம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பொறுப்பேற்க மறுத்ததோடு, “அறுவை சிகிச்சையின் போது நீங்கள் இறந்திருந்தாலும் அது அல்லாஹ்வின் விருப்பமாகத்தான் இருந்திருக்கும்” என்று கூறி, வெறும் 500 முதல் 1000 ரூபாய்க்குள் இந்த விவகாரத்தைச் சமரசம் செய்து கொள்ளுமாறு அலட்சியமாகப் பேசியுள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இழப்பீடு கோரி துணை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதை அடுத்து, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நதீமை நேரில் அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
