ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பேசியதாவது, நீட் விலக்கு மசோதா இருமுறை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதை ஆளுநரும் மத்திய அரசும் தற்போது வரை பொருட்படுத்தவில்லை. நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதே என் இலட்சியம். கண்டிப்பாக நான் அதை நிறைவேற்றி காட்டுவேன் என்று கூறினார். மேலும் ஆட்சியில் அமர்ந்த பிறகு திமுக செய்த சாதனைகளை மக்களிடத்தில் கூறி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.