விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என தினம் முழங்கி வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொல். திருமாவளவன் கூட்டணி வைத்துள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் கட்சியுடன் தற்போது தொல். திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார். காங்கிரஸ் மற்றும் பாஜகவை தவிர்த்து வலுவான தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என மாற்றினார்.

தற்போது தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் கே. சந்திரசேகர் ராவ் பாஜகவின் மீது அதிருப்தியில் இருக்கும் மாநில முதல்வர்களை சந்தித்து தனக்கான ஆதரவுகளை திரட்டி வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜகவை வீழ்த்த வேண்டும் கே. சந்திரசேகர் ராவ் காய்களை நகர்த்தி வரும் நிலையில், தொல். திருமாவளவன் தெலுங்கானாவில் அவருடன் கூட்டணி வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் தொல். திருமாவளவன் தெலுங்கானாவில் கே. சந்திரசேகர் ராவ் கட்சியில் இணைந்து தன்னுடைய கட்சி ஆதரவாளர்களை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக களம் இறக்கி விட்டுள்ளார். மேலும் இப்படி தொல். திருமாவளவன் நடந்து கொண்டால் தேசிய கூட்டணி என்பது எப்படி சாத்தியமாகும் என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.