
மதுரையில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுரங்கம் வராது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தின் போது எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் அலட்சியத்தால் தான் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் அரசு மிகுந்த கவனமாகவும் கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்தார். அதனை மீறி மதுரையில் சுரங்கம் வந்தால் கண்டிப்பாக நான் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறினார்.