பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுநராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய முடிவைப் பற்றிப் பேசும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. “நான் இனி கார்ப்பரேட் அடிமை இல்லை; ஆட்டோ ஓட்டுநர்” என்ற வாசகத்துடன் தொடங்கும் அந்த வீடியோவில், “நான் மீண்டும் புதிதாகத் தொடங்கப் பயப்படவில்லை” என்று ராகேஷ் பேசுகிறார்.

வாழ்க்கையின் கடினமான கட்டத்தில் இருப்பதாக நினைப்பவர்களுக்காக இந்த வீடியோவை தான் உருவாக்குவதாக அவர் கூறுகிறார். ​ஒரு கட்டத்தில் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணியதாகவும், ஆனால் இப்போது ஆட்டோ ஓட்டி வருவதாகவும் கூறும் அவர், “வாழ்க்கை முடிந்துவிடவோ, என்னை தோற்கடிக்கவோ போவதில்லை” என்கிறார். மேலும், “பணம் ஒரு தேவைதான், ஆனால் அது மட்டுமே தேவை இல்லை. பணத்தைத் தவிர வாழ்க்கையில் வேறு முக்கியமான விஷயங்களும் உள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Rakesh Auto Driver (@rak.shot)

உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைக் கண்டறியுங்கள்” என்று வலியுறுத்துகிறார். தடைகள் வந்தால் ஓடி ஒளியாமல் எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி, அவர் காணொளியை முடிக்கிறார். ராகேஷின் இந்தச் செயல் பலரையும் ஈர்த்துள்ளது. “ஈகோ மற்றும் சமூகத் தடையை வென்ற மனிதன் நீ! நீ எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்!” என்று பலர் அவரைப் பாராட்டி வருகின்றனர்.