இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமுமான எம்.எஸ்.தோனி, சென்னையில் உள்ள என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பிராந்திய மையத்திற்கு அதிரடி விசிட் அடித்துள்ளார்.
இதனால் இந்திய ராணுவத்தின் டெரிட்டோரியல் ஆர்மியில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கும் தோனி, அங்குள்ள கமாண்டோக்களின் கடுமையான செயல்பாட்டு நடைமுறைகளை நேரில் பார்வையிட்டதோடு, அவ
6/6 hitting targets 🎯💥
– Posted by an NSG Official @msdhoni #MSDhoni pic.twitter.com/t8MH8XcgMp
— DHONI Trends™ (@TrendsDhoni) May 17, 2026
“>
ர்களுடன் இணைந்து துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சப்மஷின் துப்பாக்கியைக் கொண்டு இலக்குகளை மிகத் துல்லியமாக தோனி சுடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, ரசிகர்களையே மிரள வைத்து வருகிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது, “நான் ஃபிட்டாகத் தெரிகிறேனா?” என்று அங்குள்ள ராணுவ வீரர்களிடம் தோனி ஜாலியாகக் கேட்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல், ராணுவப் பயிற்சிகளிலும் தனது அசாத்திய திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ள ‘கேப்டன் கூல்’ தோனியின் இந்த கம்பீரமான வீடியோ, இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும், லைக்குகளையும் குவித்து வைரலாகி வருகிறது.
