ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், சிறுவன் ஒருவனிடம் நடந்துகொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் ரியான் பராக் நடந்து சென்றபோது, அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு ஒரு சிறுவன் கூட்ட நெரிசலையும் தாண்டி அவரிடம் நெருங்கியுள்ளான். அப்போது பராக் அச்சிறுவனிடம் முதலில் “விலகிச் செல்” என்று கூறியுள்ளார்.
எனினும், அந்தச் சிறுவன் தொடர்ந்து கூடவே வர முயன்றதால், ரியான் பராக் அவனைத் தூக்கி அப்படியே பக்கவாட்டில் தள்ளி வைத்துவிட்டுத் தனது வழியில் தொடர்ந்து நடந்து சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கிரிக்கெட் வீரர் ரியான் பராக்கின் இந்த நடத்தைக்குத் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு முன்மாதிரியாக இருக்கும் நபர், சிறுவனிடம் இன்னும் கொஞ்சம் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம் என்று பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
Look, a small kid came to take a picture with Riyan Parag at the team hotel, but he angrily scolded him and told him to move away saying “hat.”🙂 pic.twitter.com/N9CVsVzUSt
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 18, 2026
“>
மைதானத்தில் காட்டும் ஆக்ரோஷம் மற்றும் டிரஸ்ஸிங் அறையில் வேப்பிங் செய்ததற்காக சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது என ரியான் பராக் ஏற்கனவே பலமுறை சோஷியல் மீடியா சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
