ஐபிஎல் 2025 தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான உயர் ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டத்தில், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து தனது அணிக்கு 245 ரன்கள் சேர்க்க உதவியதும், போட்டியின் ஒருபுறம். ஆனால் அதே ஆட்டத்தில், சில விசாரணை முடிவுகள் மற்றும் நடுவரின் நடவடிக்கைகள் அவரை எரிச்சலடைய வைத்தது. இறுதியில், SRH 246 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

 

போட்டியின் ஐந்தாவது ஓவரில், SRH வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக, கிளேன் மேக்ஸ்வெல்லின் பந்துக்கு umpire wide என சைகை காட்டினார். ஆனால் மேக்ஸ்வெல் ஹெட் பந்தை தொட்டதாக நம்பியதால் உடனே DRS கேட்க ‘T’ சைகையை காட்டினார். வழக்கமாக, DRS கேட்கும் முன் அணி கேப்டனிடம் umpire சம்மதம் பெறுவார். ஆனால் அந்த நேரத்தில் umpire நேரடியாக மேக்ஸ்வெல்லின் கோரிக்கையை ஏற்று விட்டதால் இதனால் கேப்டன் ஐயர் கடும் கோபம் அடைந்தார்.

அவர் கோபத்தில் கேப்டனை கேட்காமல் எப்படி ரிவ்யூ கொடுக்க முடியும் என்று அம்பையரை நோக்கி கத்தியது கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.