தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நானி, அந்தே சுந்தராணிகி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “தசரா” படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா டைரக்டு செய்ய நாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து இருக்கிறார். அதோடு பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக சுதாகர் செருக்குரி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படத்தின் 2வது பாடலான “ஓரிவாரி” பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் தமிழ் பாடலான தீக்காரி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.