
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, இபிஎஸ்ஐ போன்று திமுகவினர் ஒன்றும் பச்சோந்தி கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார். எய்ம்ஸ் செங்கல்லை வைத்து பிரசாரம் செய்வதை உதயநிதி மாற்ற வேண்டும் என இ பி எஸ் விமர்சித்திருந்தார்.
இதற்கு நானாவது எய்ம்ஸ் செங்கல்லை காட்டினேன், இங்க ஒருத்தர் பல்லை காட்டிக் கொண்டு இருக்கார் பாருங்க என மோடியுடன் இபிஎஸ் இருக்கும் புகைப்படத்தை காட்டி காஞ்சிபுரம் பிரசாத்தில் உதயநிதி பதிலடி கொடுத்தார்.