வரதட்சணை தொடர்பான கொலை வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிக்கி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின் பாட்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு காருக்குள் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது போலக் காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், விபின் வெள்ளை நிற வேகன்ஆர் காரில் ஒரு பெண்ணுடன் இருப்பது, பின்னர் சிலர் அவரை வெளியே இழுத்து தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதைப்பற்றி நிக்கியின் தந்தை பிகாரி சிங், “அவர் வேறு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார்” என்று அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.
ग्रेटर नोएडा दहेज मामला: आरोपी विपिन को 2024 में दिल्ली में एक लड़की के साथ घूमते हुए परिवारवालों ने पकड़ा था तब विपिन की पिटाई भी हुई थी, अब सामने आया वीडियो।#GreaterNoida #Dowry #Nikki #noidafire #noidanews #nikkimurdercase #greternoidaupdate pic.twitter.com/7GDXZcvya4
— Shyamdatt Chaturvedi (@ShyamDatt_C) August 24, 2025
“>
நிக்கியின் குடும்பத்தினர் கூறுவதன்படி, திருமணத்திற்கு பின்னர் தொடர் துன்புறுத்தல், வரதட்சணை கோரிக்கை, மற்றும் அடிக்கடி உடல் வன்முறைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் பணம் வழங்கப்பட்டிருந்தாலும், பின்னர் ₹60 லட்சம் கூடுதல் தொகை மற்றும் நிக்கியின் தந்தையின் மெர்சிடிஸ் காருக்கும் கண் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை நிக்கி மீது உடல் ரீதியான தாக்குதலுக்குப் பிறகு, விபின் அவர் மீது தீவைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 70% தீக்காயங்கள் ஏற்பட்ட நிக்கி, சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
#WATCH | Greater Noida: Accused of murdering his wife Nikki over dowry demands, Vipin Bhati says, “… I have no remorse. I haven’t killed her. She died on her own. Husband and wife often have fights, it is very common…” pic.twitter.com/YrPFaYARuY
— ANI (@ANI) August 24, 2025
“>
இந்த கொடூர சம்பவத்துக்குப் பிறகு, நிக்கியின் குடும்பம் கசானா காவல் நிலையம் முன்பு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். விபின் தப்பிக்க முயன்றபோது போலீசார் அவரை காலில் சுட்டு கைது செய்தனர்.
அதே நேரத்தில், விபின் மருத்துவமனையில் இருந்து வெளியான வீடியோவில், “நான் அவளை கொல்லவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கணவன்-மனைவிக்குள் சண்டைகள் உண்டு” என உரக்கச் சொன்னது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், நிக்கி குடும்பத்தின் புகாரின் அடிப்படையில் மைத்துனர், மற்றும் மற்ற உறவினர்களை கைது செய்ய விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
