தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு நேற்று சென்ற நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நேற்று பல்வேறு கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக திருநெல்வேலியில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு திருநெல்வேலியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இருட்டுக்கடை அல்வா கடைக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்று அங்கு அல்வாவை வாங்கி சாப்பிட்டார்.

இது தொடர்பான புகைப்படத்தை அதிமுக தற்போது தங்களுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து நாட்டில் எவ்வளவோ அமளி நடக்குது. ஆனால் அங்க பாரு ஒருத்தரை என்று பதிவிட்டுள்ளனர். அதோடு கவுண்டமணி காமெடியையும் இணைத்துள்ளனர். மேலும் இதற்கு திமுகவும் பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி சாப்பிடும் போட்டோவை வெளியிட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர்.