நாடு முழுவதும் இன்று அனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமான் ஜெயந்தி விழா அமைதியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ராம நவமி திருவிழாவின் போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து அனுமான் ஜெயந்தி விழாவை அமைதியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.