நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர்கள் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட கூடாது.

மாணவர்கள் மனநிலையை பாதிக்கும் கருத்துக்களை கூறக்கூடாது. பள்ளி முடிந்ததும் வகுப்பறையிலிருந்து மாணவர்களை உடனே வெளியேற்றி வகுப்பறையை பூட்ட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து பள்ளிகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இதனை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.