இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் பல்வேறு தகுதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பலரும் ரேஷன் கார்டை பெற்று பயனடைந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தகுதியற்றவர்கள் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.