இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் முதலீட்டாளர்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக பல வங்கிகளும் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகின்றன. அதே சமயம் பல சிறு நிதி வங்கிகள் ஒரு வருட காலத்திற்கு எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இருந்தாலும் நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான sbi வங்கி ஒரு வருட பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.80 சதவீதம் வட்டி மட்டுமே வழங்குகின்றது. இந்த நிலையில் எந்தெந்த சிறு நிதி வங்கிகள் 8 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அதன்படி உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி ஒரு வருட FD கணக்குகளுக்கு 25 சதவீத வட்டி வழங்குகிறது.  3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை   7.20% வட்டி வழங்கப்படுகிறது. ஷிவாலிக் சிறு நிதி வங்கியில் ஒரு வருட FDக்கு 8.10%மும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான FDக்கு 7% வட்டியும்வழங்குகிறது.  ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் ஒரு வருட FDக்கு 8.20%மும், 3 வருட FDக்கு 8%மும், 5 வருட FDக்கு 7.25% வட்டியும் வழங்குகிறது.