இந்தியாவில் புதிதாக பத்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அம்சமாக படுத்து கொண்டே பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மாடல் தயாரிக்கப்படும் இடம் மற்றும் பயன்பாட்டிற்கு வரும் தேதி குறித்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்லீப்பர் வெர்ஷன் மாடலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தயாரிக்கும் வேலைகள் விரைவில் தொடங்கும்.

இந்த பணிகள் சென்னையில் உள்ள ஐ சி எப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வரும் வருவதாக தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டெண்டர் பெங்களூரில் உள்ள BEML என்ற தொழிற்சாலை பெற்றுள்ளது. மொத்தம் 675 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முழு நீள படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் மாடல் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தயாராகிவிடும் என்றும் இந்த ரயிலின் டிக்கெட் வெறும் 1500 ரூபாய் மட்டுமே என்பதால் இந்த ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.