மின்வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டு வெடிக்க செய்யப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் கருவிகளுக்கு வரும் 2025 ஆம் வருடம்  ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் அபாயகரமானதாக மத்திய அரசு கருதுகிறது.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இதை உற்பத்தி செய்யவும், வைத்திருக்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளுக்கு 2025 ஆம் ஆண்டு இறுதியில் முழுமையாக தடை விதிப்பது என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.