டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சிறப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்..

டெல்லியில் இருக்கக்கூடிய ‘நியூஸ் க்ளிக்’ செய்தி நிறுவனத்தினுடைய அலுவலகத்தில் காலையிலிருந்து சுமார் 35 இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் அந்த நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 7 பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதன் தொடர்புடையவர்களின் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினரால்  புதிய வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த விசாரணை நடைபெற்றது. பல நிறுவனங்களிடமிருந்து இருந்து பணம் பெற்று சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட நிதி பெற்றது தொடர்பான புகாரில் நியூஸ் கிளிக் பத்திரிகை மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக பொருளாதார குற்றதடுப்பு  பிரிவு போலீசார், அமலாக்கத்துறை சார்பில் ஏற்கனவே வழக்குகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு அது சம்பந்தமாக சோதனைகள் எல்லாம் நடைபெற்ற நிலையில், புதிதாக வழக்கு பதிவு செய்து இன்றைய தினம் மீண்டும் காலை முதல் சோதனையானது நடைபெற்று வந்தது.

அப்போது அவர்களிடமிருந்து பல்வேறு நபர்களிடமிருந்து அவர்களின் உடைய லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  டெல்லியில் இருக்கக்கூடிய நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு டெல்லி சிறப்பு போலீசார் சீல் வைத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.