மக்களவையில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில், சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அசம்பாவிதத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரைச் சபைக்கு வர வேண்டாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்றும், அவையில் மூன்று பெண்கள் முன்வரிசையில் நின்றதைக் கண்டு அவருக்குத் துணிச்சல் குறைந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அரசின் இந்தச் செயல்பாட்டை “முட்டாள்தனம்” என்று சாடிய பிரியங்கா காந்தி, முக்கியமான மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். சபையில் ஆரோக்கியமான விவாதங்களைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய காரணங்கள் கூறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
