ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் அருகே ஸ்கூட்டர் மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதாவது ஒரு ஆட்டோ இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. மங்கள்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு ஸ்கூட்டர் திடீரென ஆட்டோவை முந்திச் சென்று, ஒரு குறுகிய சந்திற்குள் நுழைய முயன்றது.
Caught on CCTV: Auto-rickshaw overturns while trying to save scooter rider on NH-55 in #Odisha, 5 injured.
At least five people were injured after an auto-rickshaw overturned on National Highway 55 near Mangalpur on the outskirts of Jagatsinghpur.
A scooter suddenly came from… pic.twitter.com/vV1eb2mRl6
— Sambad English (@Sambad_English) February 5, 2026
ஸ்கூட்டர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, நெடுஞ்சாலையிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் உட்பட மொத்தம் 5 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை சீராக இருந்ததையடுத்து, அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த ஒட்டுமொத்த விபத்து காட்சிகளும் அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. ஸ்கூட்டர் ஓட்டுநரின் கவனக்குறைவால் நேரிட்ட இந்த விபத்து குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
