பீகார் மாநிலம் பெட்டியாவில் உள்ள முஃபஸ்ஸில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்பூர் பைராகி கிராமத்தில், குழந்தை பிறந்த ஆறாவது நாள் கொண்டாடப்பட்ட விழாவில் , கோபால்கஞ்ச்  நீதிமன்ற காவல் நிலையத்தில் பணிபுரியும் அமித் சவுத்ரி என்ற காவலர், தனது அரசு பிஸ்டலை மேடையில் நடனமாடிய ஒரு பெண்ணிடம் வழங்கிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நடனப் பெண் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியை அச்சுறுத்தும் வகையில் அசைத்ததும், பின்னர் காவலர் அமித் சவுத்ரியே வானத்தை நோக்கி சுட்டதும் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

அரசு ஆயுதத்தை தனிப்பட்ட கேளிக்கைக்காகப் பயன்படுத்தியதோடு, காவல்துறையினரின் இச்செயலை எதிர்த்த பொதுமக்களிடம் அவர்கள் தவறாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. விவேக் தீப் உத்தரவின் பேரில், காவலர் அமித் சவுத்ரி, அவரது சகோதரர் மிசீர் சவுத்ரி மற்றும் தீயணைப்புத் துறையில் உள்ள காவலர் அன்மோல் திவாரி உள்ளிட்ட சில அறியப்படாத நபர்கள் மீது இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
<a href=”http://

“>
மூவரையும் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அரசு ஆயுதத்தை தவறாகப் பயன்படுத்தியமைக்காக காவலர் அமித் சவுத்ரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்