ஈரான் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதன்படி, ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டுமானால், பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுடனான ‘ஆபிரஹாம் உடன்படிக்கையை’ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த ஆபிரஹாம் உடன்படிக்கையில், இஸ்ரேலை ஒரு தனிநாடாக அங்கீகரிப்பது மிக முக்கிய அம்சமாகும். இந்த நிபந்தனை பாகிஸ்தானை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது 78 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்காத பாகிஸ்தான், இந்த அழுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தங்கள் நாட்டின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிராக இருப்பதால் இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றும், இஸ்ரேலை ஒரு நாடாக பாஸ்போர்ட்டில் கூட குறிப்பிடாத தங்கள் நாட்டின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.