திருச்சியில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது, ஆபத்தான இடத்தில் செல்ஃபி எடுப்பது என அடுக்கிக்கொண்டு போகலாம். சோசியல் மீடியாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் ஆபத்தை உணராமல் பைக் சாகசம் செய்கின்றனர். இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் பிரகாஷ் என்ற வாலிபர் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வேதாளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.