தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு என்பது “சோஃபா மாடல் அரசு” (SOFA Model) தான் என்று அமைச்சர் வன்னி அரசு புதிய விளக்கமளித்துள்ளார். முன்னதாக, தவெக அரசை “சோஃபா மாடல்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் வன்னி அரசு இந்த விளக்கத்தை முன்வைத்துள்ளார்.
​செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, சோஃபா (SOFA) என்ற வார்த்தைக்குள் இருக்கும் அரசியல் கொள்கைகளை விரிவாகப் பட்டியலிட்டார்.

அதன்படி, S என்பதற்கு சமூகநீதி (Social Justice), O என்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடு (Organised Action), F என்பதற்கு சுதந்திரம் (Freedom) மற்றும் A என்பதற்கு ஊழல் மற்றும் சாதி ஒழிப்பு (Anti-Corruption & Caste) என்று அவர் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டைத் தவெக அரசுக்குச் சாதகமான ஒரு நேர்மறை மாடலாக மாற்றிக் காட்டிய அமைச்சர் வன்னி அரசின் இந்த அதிரடிப் பதில், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.