உலக அளவில் கூகுள், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பல ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்டல்சன்சி நிறுவனம் (டிசிஎஸ்) நாங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவது கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளது. எங்களிடம் இருக்கும் ஊழியர்களின் திறமையை மேம்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம் என்றும் வெளிநாட்டு  நிறுவனங்களில் வேலையை இழந்த இந்திய வம்சாவளியினருக்கு  நாங்கள் வேலை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி மிலிந்த் லக்காத் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.‌ இவர் பல்வேறு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அளவுக்கு அதிகமான ஆட்களை பணியில் அமர்த்தியது தான் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் உலக அளவில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனம் அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று கூறியது ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.