உடல் எடையைக் குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் ஏசி அறைகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஜிம்மிற்குச் செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில், ஒரு சாதாரண தொழிலாளியின் உடல்வாகு இணையதளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலான வீடியோவில், லாரியில் இருந்து கனமான இரும்பு கம்பிகளை இறக்கும் ஒரு தொழிலாளி, எவ்வித நவீன உபகரணங்களும் இன்றி கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த ஜிம் செல்லும் இளைஞர்கள், “நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு ஜிம்முக்குச் செல்வதை விட, கூலி வேலைக்கே சென்றுவிடலாமா?” என்று வேடிக்கையாகவும் வியப்பாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ உடற்பயிற்சி நிலையங்களில் உருவாக்கப்படும் ‘செயற்கையான’ தசைகளுக்கும், அன்றாடக் கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் ‘இயற்கையான’ வலிமைக்கும் உள்ள வித்தியாசத்தை உலகுக்குக் காட்டுகிறது.

“>

இதனால் விலை உயர்ந்த புரோட்டீன் பவுடர்கள் அல்லது நவீன இயந்திரங்கள் இன்றி, வெறும் வியர்வை சிந்தி உழைப்பதன் மூலமே அந்தத் தொழிலாளி இரும்பு போன்ற உடலைப் பெற்றுள்ளார். “உண்மையான வலிமை ஏசி அறைகளில் இல்லை, அது உழைக்கும் களத்தில்தான் இருக்கிறது” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து அந்தத் தொழிலாளியின் கடின உழைப்பைப் பாராட்டி வருகின்றனர்.