உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், வேலை தேடி வந்த 13 தொழிலாளர்கள் சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அதிர்ச்சி நொடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பிகார், ஜார்கண்ட், நேபாளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த இவர்களுக்கு மாதம் 8,000 முதல் 12,000 ரூபாய் வரை சம்பளமும், தங்குமிடமும் தருவதாகக் கூறி ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆனால், அங்கு வந்தவுடன் அவர்களின் மொபைல் போன்கள் மற்றும் ஆதார் கார்டுகள் பறிக்கப்உத்தரப்பிரதேச மாநிலம் பட்டு, தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து ஓடாமல் இருக்க, தொழிற்சாலையின் உள் பக்கமும் வெளி பக்கமும் கொடூரமான பிட்புல் ரக காவல் நாய்கள் நிறுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடுமையான சிறைபிடிப்பில் தொழிலாளர்கள் தினமும் கடுமையான பசியாலும் வன்முறையாலும் வாடியுள்ளனர். சில நேரங்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பட்டினியாகப் போடப்பட்டு, மாட்டுத் தீவனத்தில் செய்யப்பட்ட ஒரே ஒரு கடினமான ரொட்டி மட்டுமே அவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பளம் ஏதும் தராமல், உடல்நிலை சரியில்லாத போதும் மருத்துவம் பார்க்காமல், வேலை செய்ய மறுப்பவர்களை இரும்பு கம்பிகள், சாட்டைகள் மற்றும் ஃபேன் பெல்ட்களால் கொடூரமான முறையில் முதலாளிகள் தாக்கியுள்ளனர். இறுதியில், காவல்துறையின் சிறப்புப் படை நடத்திய அதிரடி சோதனையில் இந்த 13 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.

அதோடு மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் எலும்பு முறிவுகள் மற்றும் கடுமையான காயங்கள் இருப்பது உறுதியானது. இந்த கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரைக் கைது செய்துள்ளனர்; தப்பியோடிய முக்கிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.