தமிழ் சினிமாவில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் அடா ஷர்மா. இவர் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் இவர் தனக்கு எண்டோ மெட்ரியோசிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்ததால் இந்த நோய் வந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த நோயால் அவதிப்பட்டு வரும் இவர் தொடர்ந்து கடும் இடுப்பு வலி இருப்பதாகவும் நரக வேதனையை அனுபவிப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
