பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வைத்து இயக்குனர் அட்லி ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜவான் பட ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். ஜவான் படம் மூலம் அட்லி மட்டுமல்ல நயன்தாராவும், அனிருத்தும் பாலிவுட் சென்றிருக்கிறார்கள். ஜவான் ட்ரைலரை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். விக்னேஷ் சிவன் அட்லீயை மனதார பாராட்டி இருந்தார்.

இன்ஸ்டா ஸ்டோரீஸ் இல் விக்னேஷ் சிவனின் பாராட்டை பார்த்த ஷாருக்கான் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டு உங்களுடைய அன்புக்கு நன்றி விக்னேஷ். நயன்தாரா அருமையானவர். ஆனால் நான் யாரிடம் போய் இதை சொல்கிறேன். உங்களுக்கு தான் அது ஏற்கனவே தெரியுமே. அவர் சில முக்கிய கிக் மற்றும் பன்ச்களை கற்று வைத்திருக்கிறார். அதனால் உஷார் கணவரே. ஜவான் படத்தில் ஆக்சன் ராணியாக வந்திருக்கிறார்.

நயன்தாரா அவருடைய கையில் துப்பாக்கியோடு வந்த காட்சி அனைவருக்கும் பிடித்து விட்டது. அந்த காட்சி திரையில் வரும் பொழுது எல்லாம் ரசிகர்கள் ஆரவாரத்தில் பொங்கி எழ போகிறார்கள். ஜவானுக்காக தான் கிக் மற்றும் பன்ச்சுகளை கற்று இருக்கிறார் நயன்தாரா அதை மனதில் வைத்து தான் ஷாருக்கான் விக்னேஷ் சிவனை எச்சரித்திருக்கிறார். படத்திற்காக கற்றதை வைத்து நயன்தாரா விக்னேஷ் சிவனை அடித்து விடக்கூடாது என்று கலாய்த்துள்ளார் ஷாருக்கான்.