சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில் மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் அவர் எங்கே போனாலும் தலையில் குல்லா அணிந்து கொண்டுதான் போகிறார். இதனால் அவருக்கு தலையில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கேள்விக்கு விளக்கம் கொடுத்த சிவகார்த்திகேயன், அடுத்த படமாக SK 23 படத்திற்கான கெட்டப்பில் தற்போது இருப்பதாகவும், அதை வெளியில் காட்டக்கூடாது என படக்குழு கண்டிஷன் போட்டதால் குல்லாவுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். எவ்வளவு வெயில் அடித்தாலும் இதை மாட்டிக்கொண்டு தான் சுத்த வேண்டியிருக்கு என்று காமெடியாக கூறியுள்ளார்.