சென்னை பாரிமுனை பகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிமுனை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டு அணிந்த சிலர், பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பான சர்வே (கருத்துக்கணிப்பு) எடுத்ததாகத் தெரிகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி திமுகவினர், “பொதுமக்களிடம் சர்வே எடுக்கக் காவல்துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும்” என்று தவெக தொண்டர்களிடம் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
