சமூக வலைதளத்தில் தற்போது சீருடை அணிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு வயதான பெண்ணை கன்னத்தில் நடுரோட்டில் வைத்து அடிக்கும் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் வயதான பெண்மணி ஏதோ விற்பனை செய்வது போல் இருக்கிறது.

 

அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் பெண்ணுடன் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென அவரை கன்னத்தில் அறைந்து விட்டார். மேலும் இது தொடர்பான காணொளி வைரலாகி வரும் நிலையில் எந்த இடத்தில் எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளிவரவில்லை. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வரும் நிலையில் பலரும் அந்த போலீஸ் காரருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.