உத்தரப்பிரதேசத்தில் தந்தை தன்னை பொதுவெளியில் திட்டி, மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொன்னதற்காக, சிறுவன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தனது தந்தை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி அந்தச் சிறுவன் காவல்துறையினரை அணுகியுள்ளார். இந்த விசித்திரமான புகாரைக் கேட்ட காவல்துறையினர், இது ‘ஜென் ஜி’ மற்றும் ‘மிலேனியல்’ தலைமுறையினருக்கு இடையிலான மோதல் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய நவீன காலத்தில் வளரும் குழந்தைகள் தங்கள் சுயமரியாதை மற்றும் தனிப்பட்ட உரிமைகள் குறித்து எவ்வளவு விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டிக்கும் முறையிலும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை என்பதை இது உணர்த்துகிறது.

இந்நிலையில் “தந்தையைத் தண்டிப்பதை விட, இருவருக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்துவதே முக்கியம்” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.