தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் மச்சான் தான் ரிச்சர்ட் ரிஷி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதனிடையே நடிகர் ரிச்சர்ட் ரிஷிசில நாட்களுக்கு முன்பு நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அதனைப் பார்த்து ரசிகர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்று கருத்துக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிச்சர்ட் ரிஷி, நானும் யாஷிகாவும் நடிக்கும் சில நொடிகளில் படத்தின் புகைப்படங்களை தான் சோசியல் மீடியாவில் ஷேர் செய்தேன். இந்த படத்தை கன்னட இயக்குனர் வினை பரத்வாஜ் இயக்குகிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.