நடிகர் சித்தார்த்தும், அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. ஆனாலும் இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.  சமீப காலமாக இருவரும் இணைந்தே பொதுவெளியில் உலா வருகிறார்கள்.  இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போல் இரு புகைப்படத்தை சித்தார்த் பதிவிட்டார்.

இது அவர்களது காதலை உறுதி செய்வதாக இருக்கிறதென்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.  இதற்கு பதிலளித்த அவர், ‘சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என கூறியுள்ளார். இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. இந்நிலையில், ‘டக்கர்’ படவிழாவில் அதிதியுடனான காதல் குறித்து சித்தார்த்திடம் கேட்கப்பட்டது.