தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. முகமூடி, பீஸ்ட் , ராதே ஷியாம், அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடனமாடிய ‘புட்டபொம்மா’ பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. இவர் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் செர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல  கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்து பூஜா ஹெக்டே தரப்பில் உறுதிபடுத்தவில்லை.