தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களிலும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக மாறிய ப்ரியா பவானி சங்கர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் அண்மையில் ஒரு தனியார் ஹோட்டலை தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.

இந்த ஹோட்டல் திறப்பு விழா பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஹோட்டலுக்கு Liam’s Dinner என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தன்னுடைய ஹோட்டலுக்கு சமையல்காரர் மற்றும் பணியாளர்கள் வேண்டும் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார். மேலும் ஹோட்டலில் பணிபுரிய விரும்புபவர்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு பேசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.