சென்னை சாலிகிராமம் புஷ்பா காலணியை சேர்ந்த பிரபல நடிகை பாபிலோனாவின் தம்பி தான் விக்னேஷ் குமார். 40 வயதாகும் விக்னேஷ் குமார் மீது போலீஸ் ஐ தாக்கியது உட்பட பல குற்ற வழக்குகள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

தசரதபுரம் எட்டாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விக்னேஷ் தனியாக வசித்து வந்த நிலையில் அவரது வீட்டின் படுக்கை அறையில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.