நடிகர் விஜய்   லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்சம் என்றும் படக்குழு X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் “பல ராஜாக்களை பார்த்தாச்சு மா, நீ ஒரசாம ஓடிடு” என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில், தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.