
படத்திற்கு பூஜை போட்ட நடிகை சன்னி லியோனுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். நேற்று படப்பிடிப்புக்காக பூஜை போட்ட அவர் தேங்காய் மீது கற்பூரம் வைத்து பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது. அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வர ரசிகர்கள் என்ன ஆனது என கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க