தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக கொடைக்கானல் வந்த விஜய் இன்று மதுரை ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு கிளம்பினார்.

மதுரை ஏர்போர்ட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஏர்போர்ட்டில் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்க்கு சால்வை அணிவதற்காக ஓடி வந்த நிலையில் அவரின் பவுன்சர்கள் தாக்குவதற்கு தான் வருகிறார்கள் என்று நினைத்து அந்த ரசிகரின் தலையில் துப்பாக்கியை வைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து தரதரவென இழுத்து சென்ற நிலையில் அதனை நடிகர் விஜய் கவனிக்கவில்லை.

இதேபோன்று ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் விஜயின் பவுன்சர்கள் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கும் பவுன்சருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பவுன்சர் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டது. அதாவது செய்தி சேகரிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பொருட்களை எடுத்ததால் இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பும் கொடைக்கானலில் ரசிகர்களிடம் பவுன்சர்கள் இப்படி அத்துமீறி நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் நிலையில் தற்போது பவுன்சர்கள் இதுபோன்று நடந்து வருவது தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதால் நடிகர் விஜய் இதனை சரி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.