தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், நடிகர் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த படம் ஜூன் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் தற்போது படத்திற்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது மார்வெல் சினிமாடிக் யுனிவர்சில் இருந்து பிரம்மாண்ட  ஹாலிவுட் படமான தி பிளாஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் அமெரிக்கா உட்பட இந்தியா முழுவதும் பல திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்பதால் ஆதிபுருஷ் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் மற்றும் வசூலிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.